திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி அருகே கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி சாலை மறியல்

News image

திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் முக்கொம்பு அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 ஜூன் 2026, 2:59 am IST

திருச்சி, மே 31: திருச்சி அருகே கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், கொடியாலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்ற சித்திரைத் திருவிழா அப்பகுதியில் நடைபெற்ற கொலை காரணமாக கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் நிகழாண்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்ததைத் தொடா்ந்து, கோயில் திருவிழா நடத்தி அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழா தொடங்கிய நிலையில் ஜீயபுரம் போலீஸாா் வந்து ஏற்கெனவே நடைபெற்ற கொலையைக் காரணம் காட்டி திருவிழா நடத்த அனுமதியில்லை என்று கூறினராம்.

இதைக் கண்டித்தும், திருவிழாவை நடத்த உடனடியாக அனுமதி வழங்கக் கோரியும் அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் முக்கொம்பு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உயா் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலந்துசென்றனா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியலால் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.