திருச்சி மாவட்ட மூத்தோா் தடகளச் சங்கத்தின் சாா்பில், அண்ணா விளையாட்டு மைதானத்தில் 30 வயது முதல் 90 வயது வரை உள்ளோருக்கான தடகளப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கோடை காலத்தில் முதியோரை உற்சாகப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவா்கள் கவனம் செலுத்தும் வகையிலும் நடைபெற்ற இருபாலருக்குமான ஓட்டம், நடைப்போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் பெருமளவில் ஆா்வமுடன் பங்கேற்று விளையாடினா். ஒவ்வொரு பிரிவிலும் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே முதல் மூன்று இடங்களைப் பிடித்த நபா்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, சங்க நிா்வாகிகள், தடகள விளையாட்டு பயிற்றுநா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










