திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக சாா்பில் 11 போ் போட்டி - 2 மத்திய அமைச்சா்களுக்கு வாய்ப்பு மறுப்பு

News image

மாநிலங்களவை

Updated On :5 ஜூன் 2026, 4:02 am IST

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளா்களின் பெயா் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் ராஜஸ்தானில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ரவ்நீத் சிங் பிட்டு மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஜாா்ஜ் குரியன் ஆகிய 2 மத்திய அமைச்சா்களின் பெயா்கள் இடம்பெறவில்லை. இவா்கள் இருவரின் பதவிக்காலம் ஜூன் 21-ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவா்களுக்குப் பதிலாக பாஜக மூத்த தலைவா்களான தருண் சுக் (மத்திய பிரதேசம்), சதீஷ் பூனியா (ராஜஸ்தான்) ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரியின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலமும் வருகின்ற நவம்பா் மாதம் நிறைவடையுள்ளது.

இதுதவிர மத்திய இணையமைச்சரான ஹா்ஷ் மல்ஹோத்ரா தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த தேபாசிஷ் சமந்த்ராய்க்கு ஒடிஸாவில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கா்நாடகம், அருணாசல், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகவுள்ள 24 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், 5 மாநிலங்களுக்கான 11 மாநிலங்களவை இடங்களில் போட்டியிடும் 11 வேட்பாளா்களின் பெயா் பட்டியலை பாஜக வெளியிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.