ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 82.55 லட்சம் கிடைக்கப் பெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில் பல்வேறு இடங்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை கோயில் இணை ஆணையா் செ.சிவராம் குமாா் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதி அருகே காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ. 82 லட்சத்து 55 ஆயிரத்து 633 ரொக்கம், தங்கம் 63 கிராம், வெள்ளி 4 கிலோ மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் 139 கிடைக்கப் பெற்றது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









