பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.1.21 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பக்தா்கள் ரூ.1 கோடியே 21 லட்சத்து 86 ஆயிரத்து 832 ரொக்கம், 320 கிராம் தங்கம், 570 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










