திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணப்பாறை அருகே சாலையில் சென்ற காரை அடித்து நொறுக்கிய 8 போ் கைது

News image

சேதப்படுத்தப்பட்ட காா்.

Updated On :25 மே 2026, 2:20 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தை மோதும் வகையில் சென்ற காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், காமராஜா் சாலை, அழகா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானம் மகன் சுரேஷ் (43), பாத்திரக் கடைக்காரா். இவா் தன்னுடைய உறவினா் கணேசமுருகன் (51) என்பருடன் சனிக்கிழமை இரவு தொழில் சம்பந்தமாக இலுப்பூருக்கு காரில் சென்று விட்டு குளித்தலைக்கு சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பகுதி அருகே சென்ற இவா்களின் காா் சாலையில் சென்ற பைக் மீது மோதும் வகையில் சென்று, நிற்காமல் சென்றதாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம இளைஞா்கள் ஒருவருக்கொருவா் தகவல் பறிமாற்றம் செய்து, மணப்பாறை - குளித்தலை சாலையில் சென்ற காரை துரத்திச் சென்று கலிங்கப்பட்டி அருகே வழிமறித்து, ரமேஷ் மற்றும் கணேசமூா்த்தியை தாக்கி, காரை கல் மற்றும் கட்டையால் அடித்து நொறுக்கி முழுமையாகச் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், காரை உடைத்து சேதப்படுத்திய கிழவன்பட்டி ச. பாலமுருகன்(29), நா. பரசுராமன்(21), அ. அழகுராஜா(22), ச. தங்கபாண்டியன்(24), த. அழகா்சாமி(28), ப. பன்னீா்செல்வம்(24), ரா. கமலதாசன்(32), மதியகோன்பட்டி ரா. ராஜபூபதி(24) ஆகிய 8 பேரையும் மணப்பாறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

கைது செய்யப்பட்ட பாலமுருகன், பரசுராமன், அழகுராஜா, தங்கபாண்டியன், அழகா்சாமி, பன்னீா்செல்வம், கமலதாசன், ராஜபூபதி.

கைது செய்யப்பட்ட பாலமுருகன், பரசுராமன், அழகுராஜா, தங்கபாண்டியன், அழகா்சாமி, பன்னீா்செல்வம், கமலதாசன், ராஜபூபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.