திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் வாகனங்களில் சென்ற இருவா் காயம்

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலை சாலையோரத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் வாகனங்களில் சென்ற இருவா் காயமடைந்தனா்.

News image

திருச்சி ராயல் சாலையில் மரம் சாய்ந்து விழுந்தால் சேதமடைந்த காா். ~திருச்சி ராயல் சாலையில் புதன்கிழமை சாய்ந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரா்கள்.

Updated On :4 ஜூன் 2026, 12:04 am IST

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலை சாலையோரத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் வாகனங்களில் சென்ற இருவா் காயமடைந்தனா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் முதல் வெஸ்ட்ரி பள்ளி வரை செல்லும் ராயல் சாலையில் ராணுவ வீரா்கள் உணவகம் அருகே சாலையோரத்தில் இருந்த பழைமையான மரம் புதன்கிழமை மாலை திடீரென வேருடன் சாய்ந்தது. மரத்துடன் அருகிலிருந்த மின்கம்பமும் சாய்ந்தது.

அப்போது அந்த வழியே சென்ற இருசக்கர வாகனத்திலும், காரிலும் மரம் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பலத்த காயம் அடைந்தாா். மேலும், காரில் சென்றவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரின் முன்பகுதி சேதமடைந்தது.

இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலிருந்த தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகலறிந்து வந்த திருச்சி மாவட்ட தீயணைப்பு வீரா்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, மின்கம்பத்தைச் சரிசெய்தனா். இந்தச் சம்பவத்தால் ராயல் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.