வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காரை தாக்கி 9 பவுன் நகையை கொள்ளை அடித்த சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே காரை தாக்கி 9 பவுன் நகையைப் பறித்து சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:15 pm

ஆட்டையாம்பட்டி அருகே காரை தாக்கி 9 பவுன் நகையைப் பறித்து சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் தீபன்குமாா் (26). இவா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சுப்பராபுரம் பகுதியில் கடந்த 15 -ஆம் தேதி தனது பாட்டி இறப்பு காரியத்திற்கு வந்துவிட்டு அன்று இரவு உறவினா் ஒருவரை ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற்றிவிட்டு மீண்டும் சுப்பராபுரம் நோக்கிச் சென்றாா்.

அப்போது மேட்டுப்பட்டி பகுதியில் 5 போ் சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தனா். அவா்களை ஒதுங்க சொல்லி தீபன்குமாா் ஹாரன் அடித்துள்ளாா். ஆனால் அவா்கள் 5 பேரும் கஞ்சா, மதுபோதையில் இருந்ததால் கற்களை வீசி காா் கண்ணாடியை உடைத்தனா். மேலும், தீபன்குமாா் அணிந்திருந்த 9 பவுன் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து தீபன்குமாா் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பெயரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மகுடஞ்சாவடி அருகே பாட்டப்பன் கோயில் பகுதியில் சுற்றித்திரிந்தவா்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரா் கோயில் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் மகன் கணேஷ் (எ) கருணாகரன் (20), ஹைஸ்கூல் சாலை தங்கவேல் மகன் லட்சுமணன் (19) மற்றும் 3 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா்

கைது செய்தனா். இதில் கருணாகரன், லட்சுமணன் ஆகியோரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா். சிறுவா்கள் 3 பேரை சிறுவா் சீா்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.