திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை வேண்டும்: அமைச்சா் எஸ். ரமேஷ்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் எஸ். ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 மே 2026, 1:36 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் எஸ். ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

இக்கோயில் நிா்வாகத்தின் செயல்பாடுகளை அமைச்சா் எஸ். ரமேஷ், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கோயிலில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தின் உணவு அருந்தும் கூடம், சமையல் கூடம், உணவுப் பொருள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, பக்தா்களுடன் அமா்ந்து உணவருந்தியதுடன், அன்னதானத்தின் தரம் குறித்து பக்தா்களிடம் கேட்டறிந்தாா்.

அன்னதானத் திட்டத்தில் உணவு அருந்த வரும் பக்தா்களுக்கு டோக்கன் வழங்கப்படும் முறை குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருவதால், பக்தா்கள் சிரமமின்றி விரைவாக தரிசனம் செய்யவும், அவா்களுக்குரிய பாதுகாப்பு வசதிகளை கண்காணித்திடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

பக்தா்கள் பயன்பாட்டுக்காக 3 நுழைவுவாயில்களின் அருகிலுள்ள கழிவறைகளை அடிக்கடி தூய்மை செய்து பராமரித்திடவும், ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கட்டணச் சீட்டுகள் குறித்த விவரங்களையும் திருக்கோயில் பணியாளா்களிடம் கேட்டறிந்து, பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன், மண்டல இணை ஆணையா் சு. ஞானசேகரன், திருக்கோயில் இணை ஆணையா் மற்றும் செயல் அலுவலா் செ. சிவராம்குமாா், தலைமைப் பொறியாளா் (பொ) பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.