தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தின் நுழைவுவாயில் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 12:01 am IST

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தின் நுழைவுவாயில் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து ஒன்று துவாக்குடி சாலையில் வெளியே வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த த. சதீஷ் (37) ஓட்டி வந்துள்ளாா்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இழுப்பூரைச் சோ்ந்த சி. மருதமுத்து (34), பொ. பழனிசாமி (32) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பேருந்து முனையத்தின் உள்ளே சென்றுகொண்டிருந்தனா்.

இந்நிலையில், வேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மருதமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். உடன் வந்த பழனிசாமிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.