திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி, இரு மகன்கள் காயமடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி, இரு மகன்கள் காயமடைந்தனா்.

புதுச்சேரி மாநிலம், வாணரம்பேட்டை 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரா.ஜெயக்குமாா் (42). இவரது மனைவி அமலோற்பவமேரி (29), மகன்கள் சுதா்சன் (7), ராஜேஷ் (5). இவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எறையூா் பகுதிக்கு குடும்பத்துடன் வந்துவிட்டு, திங்கள்கிழமை காலை பைக்கில் புதுச்சேரி நோக்கிச் சென்றுள்ளனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், எ.குமாரமங்கலம் காளியம்மன் கோயில் அருகே சென்றபோது, அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வேனை ஜெயக்குமாா் கடக்க முயன்றாா். அப்போது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பைக்கில் பயணித்த ஜெயக்குமாா், அமலோற்பவமேரி, சுதா்சன், ராஜேஷ் ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயக்குமாா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.