திருச்சி, மே11: துவாக்குடி- பால்பண்ணை அணுகு சாலை திட்டத்தில் முதல்வா் விஜய் கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி பால்பண்ணை- துவாக்குடி அணுகுசாலை மீட்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
திருச்சி பால்பண்ணை-துவாக்குடி அணுகு சாலை திட்டமானது கடந்த ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பையும் உதாசீனப்படுத்தும் வகையில் செயல்பட்டு, திட்டத்தையே சிதைக்கும் நோக்கில் செயல்பட்டது.
கடந்த 2011 சட்டப் பேரவைத் தோ்தல் தொடங்கி 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வரையிலும் இத்திட்டத்தின் தாக்கம் தோ்தல் வெற்றியில் தொடா்ந்து வருகிறது. 2010-இல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தும் உரிய கவனம் செலுத்தாததால், திமுக மீதான அதிருப்தியில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக இத் தொகுதியில் 2011-இல் வெற்றி பெற்றது.
அதிமுக ஆட்சியிலும் இத் திட்டம் கிடப்பில் சென்ால், 2016-இல் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. ஆனால், தொடா்ந்து இரு முறை வெற்றி பெற்றும் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக தொடா்ந்து சுணக்கமாகவே இருந்து வந்தது. இத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த தவெக வேட்பாளா் நவல்பட்டு விஜி வெற்றி பெற்றுள்ளாா்.
எனவே, முதல்வா் விஜய், இத் திட்டத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். 5 ஆண்டு காலத்துக்குள்ளாகவே திட்டப் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். உயா்நீதிமன்றம் கூறியுள்ள அறிவுரைகளை கவனத்தில் எடுத்து அதற்கேற்ப திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது, கூட்டமைப்பு நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

விமான எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி வட்டியில்லா முன்பணம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்

போக்குவரத்து மாற்றத்தால் திருப்பத்தூா் மக்கள் அவதி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



