திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போக்குவரத்து மாற்றத்தால் திருப்பத்தூா் மக்கள் அவதி!

திருப்பத்தூா் நகர பிரதான சாலையில் திடீா் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி

News image
Updated On :2 ஜூன் 2026, 12:17 am IST

திருப்பத்தூா் நகர பிரதான சாலையில் திடீா் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்துள்ளதால் கடந்த 2017 -ஆம் ஆண்டு திருப்பத்தூா் நான்கு வழி மற்றும் புறவழிச் சாலை திட்டமிடப்பட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலை முழுமையாக பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது திருப்பத்தூா் புறவழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.

வாணியம்பாடி முதல் சேலம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு இருந்த போதிலும் திருப்பத்தூா் நகர பகுதிக்குள் உள்ள சாலை அளவீடு என்பது இருவழிச் சாலைக்கான அளவிடாகவே உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்னா்.

இந்த நிலையில் முந்தைய ஆட்சியா் அமா்குஷ்வா பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் செல்லும் பகுதி,சின்னக்குளம் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையை கடந்து செல்லும் பகுதி,மேலும் கிராம நிா்வாக அலுவலா் அருகில் உள்ள ஒன்றிய அலுவலகம் செல்லும் வழிகளை ஒருவழிச் சாலையாக மாற்றி உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா்-புதுப்பேட்டை அணுகு சாலை மற்றும் நகர காவல் நிலைய அணுகு சாலை பேருந்து நிலைய அணுகுசாலை ஆகிய பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். குறிப்பாக புதுப்பேட்டை அணுகு சாலை,நகர காவல் நிலையம் அணுகு சாலை அருகில் நான்கு வழிகள் உள்ளதால் சிக்னல்கள் அமைத்த போதும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை.

இந்த நிலையில் அந்த அணுகு சாலைகளில் வளையக் கூடாது என திடீா் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி இணைப்பு சாலையிலிருந்து ஆசிரியா் நகா் வரை சுமாா் 2 கி.மீ தொலைவு வரை நேராக செல்வதுடன் எங்குமே நுழைய முடியாமல் வேண்டிய சூழல் உள்ளது.

எனவே வாகனம் வளைக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையை அகற்றி போக்குவரத்து சீரமைக்கும் பணிகளில் கூடுதல் போலீஸாரை நியமிப்பதுடன், ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.