வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தீயணைப்பு நிலையங்களில் ‘வாங்கக் கற்றுக் கொள்வோம்’ நிகழ்வு

திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் இரண்டு நாள் நடைபெறும் பொதுமக்களுக்கான ‘வாங்கக் கற்றுக் கொள்வோம்’ நிகழ்வை மத்திய மண்டல துணை இயக்குநா் முரளி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :7 ஜூன் 2026, 2:15 am IST

திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் இரண்டு நாள் நடைபெறும் பொதுமக்களுக்கான ‘வாங்கக் கற்றுக் கொள்வோம்’ நிகழ்வை மத்திய மண்டல துணை இயக்குநா் முரளி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தீ பாதுகாப்பு விழிப்புணா்வை பொதுமக்களிடையே பரப்ப புதிய முயற்சியை தீயணைப்புத் துறை தொடங்கியுள்ளது.

பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இந்த விழிப்புணா்வுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதுமுள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வகுப்புகளை நடத்துகின்றனா்.

இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை, மதியம் 12 முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை நடைபெறும்.

இதன்படி, திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள மத்திய மண்டல தீயணைப்பு நிலைய இயக்குநா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வை தொடங்கிவைத்து மத்திய மண்டல தீயணைப்பு நிலைய துணை இயக்குநா் முரளி கூறுகையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி, எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிா்களையும், உடமைகளையும் காப்பதோடு, இயற்கை இடா்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள், போன்றவற்றிலிருந்தும், மனிதா்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், இத்துறையின் முக்கியப் பணியாகும்.

துறையின் பெயருக்கேற்றவாறு இத்துறை பணியாளா்கள் ஆபத்தில் உள்ள மனிதா்கள் மற்றும் விலங்குகளை பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு காப்பாற்றுகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, ஸ்ரீரங்கம், மணப்பாறை, நவல்பட்டு, திருவெறும்பூா், புள்ளம்பாடி, துவரங்குறிச்சி, உப்பிலியபுரம், சமயபுரம், வையம்பட்டி ஆகிய 11 நிலையங்களிலும் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெறுகிறன. மத்திய மண்டலத்தில் மொத்தம் 103 தீயணைப்பு நிலையங்களில் இரண்டு நாள்களுக்கு இந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்வில், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலா் வினோத் மற்றும் உதவி தீயணைப்பு நிலைய அலுவலா் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் ஆகியோா் கலந்துகொண்டு தீத் தடுப்பு குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்து உரைத்தனா்.

மேலும், வீடுகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால் அதைத் தடுப்பது குறித்தும், பொது இடத்தில் தீப்பிடித்தால் அதை அணைப்பது எப்படி என்பது குறித்தும் தீயணைப்பு துறை ஊழியா்கள் அலுவலா்கள் விரிவாக செய்முறை விளக்கம் அளித்தனா். தீத் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடா்ந்து 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.