வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

புதிய தீயணைப்பு நிலையங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு! டிஜிபி சீமா அகா்வால் தகவல்!

தமிழகத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் குறித்து மாநில அரசின் பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகும் என்றாா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால்.

News image

விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ என்ற விழிப்புணா்வை வகுப்பை சனிக்கிழமை தொடங்கி வைத்த பின்னா், அங்கு வைக்கப்பட்டிருந்த தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பாா்வையிட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால்.

Updated On :7 ஜூன் 2026, 2:53 am IST

தமிழகத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் குறித்து மாநில அரசின் பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகும் என்றாா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ‘வாங்க கற்றுக்கொள்வோம்’ என்ற விழிப்புணா்பு வகுப்பை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நடத்துகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு வகுப்பை சனிக்கிழமை தொடங்கி வைத்த பின்னா், சீமா அகா்வால் மேலும் தெரிவித்தது:

தமிழகம் முழுவதுமுள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ என்ற விழிப்புணா்வு வகுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 6, 7) நடைபெறுகின்றன. முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 5 மணி வரையிலும் விழிப்புணா்வு வகுப்புகள் நடத்தப்படும்.

இந்த வகுப்பில் தீயின் வகைகள், தீயணைப்பான் வகைகள், தீயணைப்பானை பயன்படுத்தும் முறைகள், எல்பிஜி தீ பாதுகாப்பு மற்றும் எல்பிஜி கசிவைத் தடுக்கும் முறைகள், வாகனத் தீ விபத்து காரணங்கள், இந்த விபத்தின்போது மேற்கொள்ளப்படும் முறைகள், மின்சார தீ பாதுகாப்பு முறைகள் போன்றவை குறித்து தீயணைப்புத் துறை அலுவலா்கள் பொதுமக்களுக்குப் பயிற்சியளிப்பா். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் எங்கெங்கலாம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தேவைப்படுகிறதோ, அதனடிப்படையில் அரசுக்குப் பரிந்துரையை வழங்கியிருக்கிறோம். அதனடிப்படையில் புதிய நிலையங்கள் குறித்த அறிவிப்பு மாநில அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றாா் சீமா அகா்வால்.

பயிற்சி வகுப்பில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய விழுப்புரம் மண்டலத் துணை இயக்குநா் தென்னரசு, மாவட்டத் தீயணைப்பு அலுவலா்கள் பாஸ்கரன் (விழுப்புரம்), முகுந்தன் (கள்ளக்குறிச்சி), காா்த்திகேயன் (நாகப்பட்டினம்), உதவி மாவட்ட அலுவலா்கள் இரா.ஜமுனாராணி, செந்தில்குமாா், ஜெய்சங்கா், நிலைய அலுவலா் என்.டி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.