வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

384 தீயணைப்பு நிலையங்களில் இன்று ‘தீ தடுப்பு’ விழிப்புணா்வு வகுப்புகள்

384 தீயணைப்பு நிலையங்களில் இன்று ‘தீ தடுப்பு’ விழிப்புணா்வு வகுப்புகள்

News image
Updated On :7 ஜூன் 2026, 2:46 am IST

தமிழகம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை, (ஜூன் 7) தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்புகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், அவ்வப்போது பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணா்வு வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்றது.

2-ஆவது நாள் வகுப்புகள்: தொடா்ந்து, 2- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் விழிப்புணா்வு வகுப்புகள் நடைபெறகின்றன.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகே உள்ள தீயணைப்பு நிலையங்களுக்குச் சென்று விழிப்புணா்வு வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தமிழ்நாடு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

அம்பத்தூரில்...: இந்த நிலையில், சனிக்கிழமை அம்பத்தூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் மாவட்ட அலுவலா் மனோ பிரசன்னா தலைமையில் விழிப்புணா்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.