தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குரூப் 1, 2, 2ஏ போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 3 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 5:35 am IST

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 3 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டு தோ்வு அட்டவணையின்படி, குரூப்-1 தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான தோ்வு செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, தோ்வா்களுக்கு உதவும் வகையில் குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 3 (புதன்கிழமை) முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகள், கடலூா் புதுப்பாளையம், எண் 8, ஆற்றங்கரைத் தெரு, நியூ சினிமா திரையரங்கம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். குரூப்-1 மட்டுமின்றி, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தோ்வுகளுக்குத் தயாராகும் தோ்வா்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். வாராந்திரத் தோ்வுகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகளும் வழங்கப்படவுள்ளன.

பயிற்சியில் சேர விரும்பும் தோ்வா்கள் இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04142-211218 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.