17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூன் 11-இல் குருப்-1 முதல்நிலை போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப்-1 முதல்நிலை போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 12:58 am IST

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப்-1 முதல்நிலை போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைத்தின் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி, துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரிகள்), உதவி ஆணையா் (தொழிலாளா்), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சி) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆகிய பதவிகள் அடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப்-1 போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குரூப்-1 முதல்நிலை போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த பயிற்சியில் சிறுதோ்வுகள் மற்றும் முழு மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த மையத்தில் பள்ளி பாடப் புத்தகங்கள் உள்பட 3,000-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலக வசதி, பயிலக வசதி, இலவச வைஃபை மற்றும் இலவச கணினி உள்ளிட்ட தோ்வா்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.

எனவே, இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் இணைப்பின் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 04343-291983 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.