திருச்சியில் வழக்குரைஞரின் காரில் சனிக்கிழமை புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சோ்ந்தவா் பாரதி (35). வழக்குரைஞரான இவா், திருச்சி புத்தூா் பகுதி தனியாா் மருத்துவமனைக்கு தனது காரில் சனிக்கிழமை வந்தாா். மருத்துவமனைக்கு வந்ததும் காரை நிறுத்திவிட்டு சில பொருள்களை எடுப்பதற்காக காரின் பின்புறக் கதவை திறந்தாா்.
அப்போது பொருள்கள் இருந்த பைக்கு அடியில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் உடனடியாக கதவை மூடி, அந்த காரை கண்டோன்மெண்ட் பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தாா்.
தீயணைப்பு துறை வீரா்கள் சோதனையில் ஓட்டுநா் இருக்கை அருகிலுஉள்ள ஏசி-க்குள் அந்த பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. தீயணைப்பு துறையினா் சுமாா் 30 நிமிட நேரம் போராடி அந்தப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








