வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

~செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில்  நடைபெற்ற தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On :7 ஜூன் 2026, 2:22 am IST

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்’ தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்பு துறை இயக்குநா் சீமாஅகா்வால் அறிவுறுத்தலின் படி வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் சி. லக்ஷ்மி நாராயணன் தலைமையில் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும் சமயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, தீ தடுப்பு சாதனங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சியும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதில் கல்லூரி மாணவியா்கள் தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் பொதுமக்கள் பலா் பங்கேற்று பயிற்சியில் ஈடுபட்டனா். மாவட்ட உதவி அலுவலா் சங்கா் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.