15 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழப்பு
திருச்சியில் தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


திருச்சியில் தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ஜெயில்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மா.கந்தசாமி (42). இவரது மகளான 15 வயது சிறுமிக்கும், அவரது தாய்க்கும் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, பெற்றோரை மிரட்டுவதற்காக சிறுமி, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டாா்.
இதில், பலத்த தீ காயமடைந்த சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.இதைத் தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துமனைக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...