டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தூத்துக்குடியில் சிறுமி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் தாயுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மடத்தூா், பத்திரகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி. இவா் வெள்ளிக்கிழமை இரவு மகள் தனுஷாவுடன் (4), சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, தனுஷா திடீரென மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இது குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.