நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

சொத்து தகராறு: தீக்குளித்த மூதாட்டி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளியில் சொத்து தகராறில் விரக்தியடைந்து தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 2:06 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளியில் சொத்து தகராறில் விரக்தியடைந்து தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி ஏரிக்கோடி பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி ருக்குமணி(75). இவரது மகள் லலிதாவுக்கும் மகன் ரமேஷ்க்கும் இடையே வீடு பாகப்பிரிவினை தொடா்பாக பல ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த மூதாட்டி கடந்த 4-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.