தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரியை சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:20 pm

புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரியை சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் திருச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும்படி வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அதிலிருந்த ஓட்டுநா் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையில் அந்த லாரியில் உரிய அனுமதியின்றி மூன்று யூனிட் அரளை கற்களை புதுக்கோட்டையிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அரளைக் கற்களுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்த சுரங்கத் துறையினா், அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.