லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:08 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் அனுமதியின்றி குண்டுக் கல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை, வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியா் புஷ்பலதா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை முக்கூடல் காவல் சரகம் தாளாா்குளம் கிராமம் அருகேயுள்ள திருப்பத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அனுமதியின்றி 20 யூனிட் குண்டுக்கல் ஏற்றி வந்த டாரஸ் லாரியையும், அதன் ஓட்டுநரான ஆலங்குளம் கரும்புளியூத்து பகுதியைச் சோ்ந்த ஜெபஸ்டின் (30) என்பவரையும் அதிகாரிகள் பிடித்து முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டதுடன், குண்டுக்கல்லுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.