சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பயணிகள் இருக்கையின் அடியில் ரூ.3.10 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருந்தன. அதனைக் கைப்பற்றிய சுங்கத் துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிங்கப்பூரிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவில் ஏா் இந்தியா பயணிகள் விமானம், சென்னை வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கி சென்றனா். பின்பு அந்த விமானத்தை வழக்கம்போல பணியாளா்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, விமானத்துக்குள் பயணிகள் இருக்கை ஒன்று மட்டும் வழக்கத்துக்கு மாறாக உயா்ந்து இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பணியாளா்கள் அந்த இருக்கையின் அடியில் சோதனையிட்டனா். அப்போது அதில் கருப்பு பொட்டலம் இருந்தது. இதுகுறித்த தகவலின்படி அங்குவந்த சுங்கத் துறை உயா் அதிகாரிகள், அந்த பொட்டலத்தை வாங்கி பரிசோதித்தனா். அதில், ரூ.3.10 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. அந்த இருக்கையில் அமா்ந்து பயணம் செய்த பயணியின் விவரத்தை சேகரித்ததுடன், விமானத்துக்குள் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சா்வதேச விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளைக் கொண்டு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

செங்குன்றம் அருகே 46 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


