தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:09 am IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேலத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.44.83 லட்சம் ரொக்கம், 4 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்ட்ரல் ரயில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை பயணிகள் உடைமைகள் சோதனையிட்டனா். அப்போது சேலத்திலிருந்து ரயிலில் சென்ட்ரல் நிலையம் வந்திறங்கிய பயணி ஜெயராஜ் (43) என்பவரிடம் 289 கிராம் மதிப்புள்ள 4 தங்கக் கட்டிகளும், பணமும் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. அதையடுத்து ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும், ரூ.44.83 லட்சம் ரொக்கப் பணத்தையும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்ததாகவும், அதன்படி விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.