தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து சென்னை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்த கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:23 am IST

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து சென்னை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்த கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் எழும்பூா் ரயில் நிலையம் வந்து நின்றது. அந்த ரயிலின் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.

இதில், முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தப் பையை சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். அதை போதைத் தடுப்புப் பிரிவில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.