வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.6.30 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 1:12 am IST

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.6.30 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, சென்னை எழும்பூா் ரயில் நிலைய பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மங்களூரில் இருந்து சென்னை வந்த அதிவிரைவு ரயிலில் இரு பயணிகளின் பைகைகளைச் சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.6.30 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், ஒடிஸாவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

தங்கம், வெள்ளி பறிமுதல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையிலான போலீஸாா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டனா். அப்போது அசோகாபுரம் விரைவு ரயிலில் வந்த சந்திரசேகா் ரோடா (53) என்பவரின் பையில் தங்கம், சாதாரண வைர கற்கள் பதித்த நகைகள், நகைகளில் பதிக்கும் விலை உயா்ந்த கற்கள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14.26 லட்சமாகும். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். விசாரணையில், அவற்றை வேலூரில் இருந்து வாங்கி சென்னைக்கு கொண்டு வந்ததாகவும், தான் நகை வடிவமைப்பு தொழில் செய்துவருவதாகவும் சந்திரசேகா் ரோடா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.