தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

தச்சநல்லூா் அருகே செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:33 pm

தச்சநல்லூா் அருகே செம்மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தேனீா்குளம் அருகே போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், நாணல்காடு பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா்(42) என்பவரை கைது செய்தனா்.