தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கீழப்பழூர் பேருந்து நிலையம் சீரமைக்கப்படுமா?

அரியலூர், செப் 14: புழுதி நிறைந்து காணப்படும் கீழப்பழூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி பேருந்து நிலையத்தைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.    திருச்சி, தஞ்சையிலிருந்து அரியலூ

Updated On :20 செப்டம்பர் 2012, 12:25 am

அரியலூர், செப் 14: புழுதி நிறைந்து காணப்படும் கீழப்பழூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி பேருந்து நிலையத்தைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

   திருச்சி, தஞ்சையிலிருந்து அரியலூருக்கு வரும் பேருந்துகளை ஒருங்கிணைக்கும் பகுதியாக கீழப்பழூர் உள்ளது.

   இங்கு பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2005-06 ஆம் நிதியாண்டில் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த ப. இளவழகன், தனது தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிலையம் கட்ட ரூ. 4.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

   இதையடுத்து, அரியலூர்- ஜயங்கொண்டம் பிரிவுச் சாலையில் 5 வணிகக் கடைகள், பயணிகள் அமருமிடத்துடன் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படாமல் இருந்தது.

   இதே வேளையில், பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கீழப்பழூர் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 4.37 லட்சத்தில் பேருந்து நிலையத்தில் வடிகால் வசதி, ரூ. 3.40 லட்சத்தில் குளியலறை, கழிப்பறைகள், ரூ. 1.30 லட்சத்தில் பேருந்து நிலையக் கட்டடம் புதுப்பித்தல் பணி, ரூ. 1.90 லட்சத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் கிராவல் பணி என ரூ. 11 லட்சம் செலவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

   இதன் பின்னர், கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்  இந்தப் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து, பேருந்து நிலையத்திற்கு மொழிப்போர் தியாகி கீழப்பழூர் சின்னசாமி பெயரைச் சூட்டினார்.

  தூசியைக் கிளப்பும் இடமாக மாறிய பேருந்து நிலையம்: பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்து 6 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்னும் பேருந்து நிலையத்துக்குள் தார்ச் சாலையோ அல்லது கான்கிரீட் சாலையோ அமைக்கப்படவில்லை. தொடக்க நிலையில் அமைக்கப்பட்ட மண் சாலைதான் இப்போது வரை இருக்கிறது.

   இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகளாலும், பேருந்து நிலையத்தின் வெளிப் பகுதியிலுள்ள சாலையில் செல்லும் கனரக வாகனங்களாலும் எப்போதும் தூசி, புழுதி கிளம்பும் இடமாக மாறிவிட்டது கீழப்பழூர் பேருந்து நிலையம்.

   மழைக் காலத்தில் பேருந்துகள் பெரிதும் சிரமப்பட்டு பேருந்து நிலையத்துக்குள் வர வேண்டியுள்ளது. மேலும், பேருந்து நிலையத்தில் மேடு, பள்ளங்கள் உள்ளதால், பேருந்துகளில் ஏறி, இறங்க பொதுமக்கள் பெரும் அவதிப்படும் நிலையும் உள்ளது.

  எனவே, பேருந்து நிலையத்தில் தார்ச் சாலையோ அல்லது கான்கிரீட் தளமோ அமைத்தால்தான் எந்தக் காலத்திலும் பிரச்னை இல்லாமல் இருக்கும்.

  இதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர் பொதுமக்கள்.

 பயன் தராத இடத்தில் குடிநீர்த் தொட்டிகள்: பேருந்து நிலையத்துக்குள் பொதுமக்களின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள 2 குடிநீர்த் தொட்டிகள் (சின்டெக்ஸ்), பயணிகள் அமரும் இடத்திலிருந்து வெகு தொலைவில் வைக்கப்பட்டிருப்பதால், பயணிகள் குடிநீர் பருக வெகு தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

   கிராம ஊராட்சி நிதியிலிருந்து பேருந்து நிலையத்தைச் சீரமைக்க இயலாதபட்சத்தில், மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்தோ அல்லது சிறப்புத் திட்ட நிதியிலிருந்தோ சீரமைப்புப் பணிகளை  மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.