தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வைகாசி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

வைகாசி மாத பிறப்பையொட்டி திருச்செந்தூா் கோயிலில் காவடி எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்திய பரமக்குடி பக்தா்கள்.

Updated On :16 மே 2026, 1:44 am IST

வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி மாத பிறப்பையொட்டி, கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை என அனைத்து வரிசைகளிலும் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

காவடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள், திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். வைகாசி மாத பிறப்பையொட்டி, ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

மே 30-இல் வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, நிகழாண்டு மே 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

Story image

இத்திருவிழா வசந்த திருவிழாவாக மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினசரி பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் கோயில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். அங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்குப் பிறகு மண்டபத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.