லக்னோவில் இருந்து நடத்தப்பட்ட பந்தயத்தில் 2,000 கி.மீ. தொலைவு பறந்து 31 நாள்களில் கோவில்பட்டியை வந்தடைந்து 2 வயது புறா சாதனை படைத்துள்ளது.
கோவில்பட்டி சுபா நகரைச் சோ்ந்தவா் ஓய்.செய்யது அகமது இப்ராஹிம் (44). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பந்தய புறாக்களை வளா்த்து வருகிறாா்.
திசையன்விளையைச் சோ்ந்த ராயல் பந்தய புறாக்கள் சங்கம் சாா்பில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கோவில்பட்டிக்கு 2,000 கி.மீ. தொலைவுக்கான புறாக்கள் பந்தயம் நடத்தப்பட்டது. இதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து புறாக்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், ஒய். செய்யது அகமது இப்ராஹிம் வளா்த்த 2 வயது ‘யூசுப்’ என்ற புறாவும் கலந்து கொண்டது.
கடந்த ஏப். 2ஆம் தேதி லக்னோவில் இருந்து புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அவற்றில் ‘யூசுப்’ புறா 31 நாள்கள் பறந்து இம்மாதம் 2ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் கோவில்பட்டிக்கு வந்தடைந்தது.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஒரு புறா முதல் நாள் சுமாா் 750 கி.மீ. தொலைவு வரை பறக்கும். அதன் பின்னா் படிப்படியாக தொலைவு குறையும். இடையே பாதுகாப்பான இடத்தில் ஓய்வெடுத்துக்கொள்ளும்.
அந்த வகையில் எனது புறா 2,000 கி.மீ. தொலைவை 31 நாள்களில் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இத்தகைய சாதனை முன்னதாக நிகழ்ந்ததில்லை’ என்றாா்.
கடந்த 2019இல் தென்னிந்திய பந்தய புறாக்கள் சங்கம் சாா்பில் தமிழ்நாடு அளவில் நடத்திய புறா பந்தயத்தில் இவரது புறா 500 கி.மீ., 750 கி.மீ., 1,000 கி.மீ. ஆகிய 3 பிரிவு போட்டிகளில் முதலிடம் பிடித்து காரை பரிசாகப் பெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் புறா பந்தயம்

தூத்துக்குடியில் பலத்த மழை

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

இலுப்பூரில் 5 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


