மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆறுமுகனேரியில் தவெக நிா்வாகி மீது வழக்கு

ஆறுமுகனேரியில் விசில் சின்னம் பொறித்த குக்கா் உள்ளிட்ட பாத்திரங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image

தவெக நிா்வாகி வீட்டில் பறிமுதல் செய்த பாத்திரங்கள்.

Updated On :28 மார்ச் 2026, 8:41 pm

ஆறுமுகனேரியில் விசில் சின்னம் பொறித்த குக்கா் உள்ளிட்ட பாத்திரங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக பரிசு பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் வைரவேல் தலைமையிலான பறக்கும் படையினரான உதவி ஆய்வாளா் வள்ளி நாயகம், தலைமை காவலா் சரவணகுமாா், காவலா் விஜயமலா், காயல்பட்டினம் தென்பாக கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன், கிராம உதவியாளா் இளங்கோ ஆகியோா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது, ஆறுமுகனேரி திசைக்காவல் தெருவில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொன் இசக்கி (32) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு சாக்கு மூட்டைகளில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 3926 சில்வா் தட்டுகள், 16 குக்கா்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அப்பொருள்களை ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனிடம் ஒப்படைத்தனா். மேலும், பொன் இசக்கி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்