விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

போலி பணத்தைக் கொடுத்து ஏமாற்றிய 3 போ் கைது

கோவில்பட்டியில் சிறுவா்கள் விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தும் போலி பணத்தைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூன் 2026, 7:10 am IST

கோவில்பட்டியில் சிறுவா்கள் விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தும் போலி பணத்தைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி, பழனி ஆண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மீரா கனி மகன் சதாம் உசேன். அதே பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வியாழக்கிழமை வந்த மா்ம நபா்கள் ரூ. 500 கொடுத்து சில்லறை கேட்டாா்களாம். சில்லறையைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது, அவா்கள் கொடுத்த ரூ. 500 நோட்டு சிறுவா்கள் விளையாட்டுக்கு பயன்படுத்துவது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சதாம் உசைன் தேடிச் சென்று, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த மூவரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா்.

இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விளாத்திகுளம், சுப்பையாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த எல்லப்பன் மகன் ராம்குமாா் (35), விரிசம்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ராஜி (28), குளத்தூரைச் சோ்ந்த பிச்சைமணி மகன் சுரேந்தா் (34) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.