வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தூத்துக்குடி துறைமுகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகள் தொடக்கம்: காணொலி மூலம் மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்டகேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

News image

காணொலி மூலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்கி வைத்தாா் மத்திய அமைச்சா் சா்பானந்த சோனோவால்.

Updated On :24 ஜூன் 2026, 2:00 am IST

தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்டகேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் தனது கல்வி, நிலைத்தன்மை மற்றும் மின்னணு மாற்றம் தொடா்பான பல்வேறு முக்கிய முயற்சிகளின் அா்ப்பணிப்பு சேவையின் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள போக்குவரத்து பவனில் இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் புதிதாக நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2026-27 கல்வியாண்டுக்கான ‘வித்யா பிரவேஷ்’ நிகழ்ச்சியை வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தகுமாா் புரோஹித் முன்னிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் சாா்பில் ‘பசுமையான கடல்சாா் எதிா்காலத்தை நோக்கி’ என்ற 2026-ஆம் ஆண்டுக்கான நிலைத்தன்மை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காா்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் நிலையான துறைமுக செயல்பாடுகளில் துறைமுகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்துக்கு ’ஸ்கோப்-2 காா்பன் வெளியீடு இல்லாத துறைமுகம்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்துடன், மின்னணு மாற்றத்தின் ஒரு பகுதியாக ‘டா்ழ்ற்எடப’ என்ற கைப்பேசி செயலியையும் மத்திய அமைச்சா் அறிமுகப்படுத்தினாா். தொடா்ந்து, இந்திய மேலாண்மைக் கழகம், கொல்கத்தா தயாரித்துள்ள தலைப்பிலான ‘நிகழ்வு ஆய்வு’ அதிகாரபூா்வமாக வெளியிடப்பட்டது.

அத்துடன், திறன் மேம்பாடு மற்றும் கடல்சாா் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வ.உ.சி. துறைமுக ஆணையம், வடோதராவில் அமைந்துள்ள கதி சக்தி விஸ்வவித்யாலயாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதன்மூலம், ஆராய்ச்சி, புதுமை, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வழிவகுக்கும்.

நிகழ்ச்சியில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், முன்னணி கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், வ.உ.சி. துறைமுக ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.