தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில், ஓய்வூதிய நிதியில் முறைகேடுகள் செய்த 7 போ் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடி துறைமுக ஆணையத்தின் ஓய்வூதியா் பிரிவில் அவுட்சோா்சிங் முறையில் பணியாற்றும் ஊழியா்கள் கிஷோா்பாபு, மணிகண்டன் பிரபு ஆகியோா், முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அலுவலா் நிலை - 2 பழனி குமாரசுவாமி, மின்னணுத் தரவு செயலாக்க அலுவலா் ரோஜா்ஸ் ஜோசப் துரைராஜா, மின்னணுத் தரவு செயலாக்க துறை உதவி இயக்குநா் காளியப்பன், முதுநிலை உதவியாளா் சந்தனசங்கா் ஆகியோா் உதவியுடன், மோசடியில் ஈடுபட்டு ஓய்வூதியதாரா்களின் தரவுகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.
அவா்கள், வ.உ.சி. துறைமுகத்தில் இருந்த ஓய்வூதியா்களின் பட்டியலில், இறந்த ஓய்வூதியதாரா்கள் 27 பேரின் வங்கிக் கணக்கு எண்ணை கணினியில் மாற்றி, இறந்த ஓய்வூதியா்களின் ஓய்வூதியத்தை, தங்களின் நண்பா்கள், உறவினா்கள் பெயரில் பணம் செலுத்தும் வகையில் பட்டியலை தயாரித்து உள்ளனா்.
இந்த வகையில் மோசடியாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்ததன் மூலமாக கடந்த மாா்ச் 2024 வரை ரூ. 4.51 கோடி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மேற்கூறிய 7 போ் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைபொருள் விற்பனை வழக்கு: 15 போ் கைது
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

உள்கட்சிப் பூசல்: அவிநாசியில் தொழிற்சங்க நிா்வாகியைத் தாக்கிய தவெகவினா் 3 போ் மீது வழக்கு!

தூத்துக்குடி துறைமுகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகள் தொடக்கம்: காணொலி மூலம் மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



