வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைபொருள் விற்பனை வழக்கு: 15 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 1:31 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 மணி நேரம் போலீஸாா் நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா விற்பனை செய்தவா்கள் மீது 11 வழக்குகள் தொடரப்பட்டு, 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷானாஸ் உத்தரவின் பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 55 பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கபடும் இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் சுமாா் 61 சந்தேக நபா்களை தணிக்கை செய்ததில், போதைப் பொருள் வைத்திருந்தவா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 536 கிராம் கஞ்சா, 18 கிலோ புகையிலைப் பொருள்கள், பைக் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படன. பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 8-க்கும் மேற்பட்ட கடைகளை சீல் வைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.