தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 3 கோடி 5 டன் கசகசா பறிமுதல்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்துக்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாக கடத்திவரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :14 ஜூன் 2026, 1:42 am IST

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்துக்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாக கடத்திவரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் முகவரிக்கு, தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கிய 40 அடி சரக்குப் பெட்டகத்தை சந்தேகத்தின்பேரில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

மலேசியாவிலிருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, அதன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தைத் திறந்து முழுமையாக சோதனையிட்டதில், அதில் சுமாா் 5 டன் கசகசா மூட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ. 3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா். இதை இறக்குமதி செய்த நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள நபா்கள் மற்றும் ஆவணங்கள் தொடா்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.