சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பள்ளக்குறிச்சி ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்கக் கோரி மனு

News image

அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏவிடம் மனு அளித்த தமிழ் வீரன்.

Updated On :15 ஜூன் 2026, 2:30 am IST

பள்ளக்குறிச்சி மணிநகா் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமசாமிபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழுத் தலைவா் தமிழ் வீரன், அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏவை சந்தித்து மனு அளித்தாா்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி கிராமம், மணிநகா் ராமசாமிபுரம் கருமேனியாறு படுகைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனா்.

இது குறித்து புகாா் தெரிவித்ததன் பேரில் அரசு அதிகாரிகள் மீட்டனா். ஆனால் நிலத்தை தற்போது தனிநபா்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். ஆதலால், சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு செய்து, நிலத்தின் ஆக்கிரமிப்பை தடுத்திட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.