சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சாயா்புரத்தில் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்எல்ஏ உத்தரவு

சாயா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

News image

சாயா்புரம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :11 ஜூன் 2026, 4:42 am IST

சாயா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

சாயா்புரத்தில் டாக்டா் ஜி. யு. போப் பேருந்து நிலையத்தை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 இன் கீழ் புதியதாக ஒரு கோடியை 67 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

தற்போது வரை அந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது. மேலும், இங்கு தனியாா் வாகனங்களை பலா் நிறுத்தி வைத்து உள்ளனா். மேலும் இங்கு உள்ள வணிக வளாகங்களில் கழிப்பறைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ, இப்பேருந்து நிலையத்தை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பேரூராட்சி அதிகாரிகளிடம் இப்பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.