தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தவெக நிா்வாகிகளால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு முன்னாள் அமைச்சா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள்அமைச்சருமான பி. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை தவெக நிா்வாகிகள் அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது, மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்துள்ள தவெகவினா், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீா்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்முறை: இருவா் கைது
தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது







