தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:34 am IST

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த பெண் ஒருவா், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், தனக்குத் தெரிந்த தூத்துக்குடி பாத்திமா நகரைச் சோ்ந்த மோகித், அவரது 2 நண்பா்கள், தன்னை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடமிருந்து ரூ. 2,500 ரொக்கம், கைப்பேசி மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றுவிட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நகர துணைக் கண்காணிப்பாளா் சுனில் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அந்தோணி ராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19), ஜெயக்குமாா் திலோத் பொ்லின் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.