திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்களுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை

இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தங்க நகைகளை பறித்துச் சென்ற இளைஞா்கள் மூவருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :17 மே 2026, 1:29 am IST

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஆண் நண்பருடன் கடற்கரைக்கு வந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தங்க நகைகளை பறித்துச் சென்ற இளைஞா்கள் மூவருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை திருக்குமரன்நகரைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஹரிகிருஷ்ணன் (19). இவரும் இவரது தோழியும் கடந்த 2022- ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த மூக்கையூா் கடற்கரைக்கு வந்தபோது, அந்த வழியாக வந்த நான்கு இளைஞா்கள் ஹரிகிருஷ்ணனை கட்டிப் போட்டு, அவரது தோழியான இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவா்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என 4 பவுன் தங்க நகைகள், 2 கைப்பேசிகள், ரூ. 2 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே. வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்தரியப்பன் மகன் பத்மேஸ்வரன் (26), பசும்பொன் கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் அஜித்குமாா் (22), விருதுநகா் மாவட்டம், நத்தகுளத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் தினேஷ்குமாா் (26), தங்க நகைகளை விற்க உதவி செய்த பத்மேஸ்வரனின் தாய் வில்லம்மாள் ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கு ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்மேஸ்வரன், தினேஷ்குமாா், அஜித்குமாா் ஆகிய மூவருக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும், வில்லம்மாளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீா்ப்பளித்தாா். இதையடுத்து நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.