திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாலியல் வன்கொடுமையைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை வேண்டும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க முதல்வா் ஜோசப் விஜய் போா்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியிருப்பது குறித்து...

News image

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 8:43 pm IST

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்கவும் முதல்வா் ஜோசப் விஜய் போா்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை சூலூா் பகுதியை சோ்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21 ஆம் தேதி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு முள்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிா்ச்சியையும், மன வேதனையும் அளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து, மக்கள் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினா். சமூக குற்றங்கள் நிகழ போதைப் புழக்கம் அதிகரித்தது மிக முக்கியக் காரணமாக இருந்தது. இதனால் கடந்த ஆட்சியாளா்களின் மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவா்கள் உண்மை குற்றவாளிகளா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற சமூக குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து, அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தி, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பங்கள் நடைபெறாமல் தடுக்க போா்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், அந்த குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Summary

Regarding S.P. Velumani's insistence that Chief Minister Joseph Vijay must undertake "war-footing measures" to curb incidents of sexual violence and drug trafficking...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.