திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேரளம்! பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விடுதலை!

கேரளத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விடுதலை...

News image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எல்டோஸ் குன்னப்பிலில் - ENS

Updated On :27 மே 2026, 4:26 pm IST

கேரளத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிலில் விடுதலை செய்யப்பட்டார்.

கேரளத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிலில் மற்றும் அவரின் நண்பர்கள் இளம்பெண் ஒருவரைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதில், எல்டோஸின் எர்ணாகுளம் இல்லத்திலும், அவரின் நண்பர் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பிலும் வைத்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவரைக் கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து நெய்யாதிங்கரா நீதிமன்றத்தில் கடந்த திங்களன்று (மே 26) நடைபெற்ற விசாரணையின்போது, எல்டோஸ் குன்னப்பிலில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என அந்தப் பெண் கூறியது இவ்வழக்கில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இத்துடன், எல்டோஸ் குன்னப்பிலில் மற்றும் அவரின் நண்பர்கள் மீது அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண் காரில் கடத்தப்பட்டதை நேரில் பார்த்ததாகக் கூறிய 2 சாட்சிகளும், எல்டோஸ் குன்னப்பிலிலுக்கு சாதகமாகத் திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிலில் மற்றும் அவரின் நண்பர்கள் ரணீஷ், சிப்பி நூருதீன் ஆகியோரை விடுதலை செய்து நெய்யாதிங்கரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்து சில நாள்களே ஆகியுள்ள நிலையில், இந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Summary

In Kerala, former Congress MLA Eldose Kunnapillil was acquitted in a sexual assault case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.