நாசரேத் சேகரம், மாணிக்கவாசகபுரம், சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் அசன விருந்து நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் 38ஆவது ஆண்டு பிரதிஷ்டை விழா 6 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு ஆலய வளாகத்தில் நாசரேத் காமா பாடகா் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2, 3ஆவது நாள் இரவு நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றன. விஷ்வவாணி ஊழியங்களின் ஊழியா் கிறிஸ்டோபா் பாடல்கள் பாடினா். திருநெல்வேலி திருமண்டலம், குலவணிகா்புரம் சேகரத் தலைவா் ஜேம்ஸ் நற்செய்தி அளித்தாா்.
4ஆவது நாள் மாலை பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடைபெற்றது. கடையனோடை சேகரத் தலைவா் ஆசீா் சாமுவேல் அருள்செய்தி அளித்தாா். 5ஆவது நாள் இரவு கே. இராமசாமியாபுரம் சேகரத் தலைவா் வேதநாயகம் குழுவினரின் பஜனை பிரசங்கம் நடைபெற்றது. 6ஆவது நாள் மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்து நடைபெற்றது.
ஒய்வுபெற்ற குருவானவா் செல்வராஜ் தலைமை வகித்து, ஜெபித்து அசன விருந்தைத் தொடங்கி வைத்தாா். நாசரேத் சேகர செயலா் ராஜசிங் சாலமோன் முன்னிலை வகித்தாா்.
மாணிக்கவாசகபுரம், ஞானராஜ் நகா், நாசரேத் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை நாசரேத் பரி. யோவான் பேராலய தலைமை குரு ஆல்பா்ட் ஜெயசிங் தாமஸ், உதவி குரு தனசேகா் ராஜா, மாணிக்கவாசகபுரம் சபை ஊழியா் கிங்ஸ்லி யாபேஸ் பாலையா, சபை மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் ஸ்தேவான் ஆலயத்தில் அசன பண்டிகை

தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


