ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?

தவெக தலைவர் விஜய், கட்சி வேட்பாளர்களைச் சந்திக்கவிருப்பது பற்றி...

TVK Leader Vijay meeting TVK candidates in Mamallapuram

தவெக தலைவா் விஜய் - கோப்புப் படம்

Published On :4 மே 2026, 2:35 pm IST

தமிழகத்தில் விஜய்யின் தவெக 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில், தவெக வெற்றி வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தவெக - 108, திமுக - 66, அதிமுக - 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை.

தவெக தலைவர் விஜய், ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தன்னை உடனடியாக வந்து சந்திக்க வேண்டும் என்றும் உடனடியாக பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்க மாமல்லபுரத்தில் ஒரு தனியார் விடுதியை தவெக முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றி பெறும் வேட்பாளர்களை விஜய் இன்று விடுதியில் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் விஜய் தனது இல்லத்தில் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடிகை த்ரிஷா, விஜய்யின் இல்லத்திற்கு வந்துள்ளார்.

Summary

TVK Leader Vijay meeting TVK candidates in Mamallapuram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.