ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கண்ணியம், கெளரவத்தை காப்பாற்றுங்கள்! தவெக எம்.எல்.ஏ.வுக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!

தவெக எம்.எல்.ஏ.வுக்கு பேரவைத் தலைவர் அறிவுரை வழங்கியது பற்றி...

JCD Prabhakar

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் - TN Assembly

Published On :11 ஆகஸ்ட் 2026, 11:53 am IST

சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்று தவெக எம்.எல்.ஏ. சுகுமாருக்கு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசிய தவெக சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார், எதிர்க்கட்சியான திமுகவை விமர்சித்து பேசினார். அப்போது, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் சட்டப்பேரவைக்குள் வந்திருப்பார் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ”எம்.எல்.ஏ., கடந்த ஆட்சியில் எங்களின் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன் சுற்றிக் கொண்டிருந்தார். 1.31 கோடி பெண்கள் மனதில் மு.க. ஸ்டாலின் குடியிருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை நோக்கி, ”பேசும்போது சர்ச்சை கருத்துகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகப்பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். அந்த கண்ணியத்தையும் கெளரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்” என அறிவுறுத்தினார்.

Summary

TN Assembly Speaker advises TVK MLA Sugumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.