தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த 3 மான்களை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோடங்கால் கிராமத்தில் கெங்கராஜ் என்பவரின் நிலத்தில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் வியாழக்கிழமை ஒரு வயது மதிக்கத்தக்க 3 மான்கள் விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தன.
தகவலறிந்து வந்த வனத்துறையினா், மான்களை மீட்பதற்காக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலா் புன்னைவனக்கட்டி தலைமையில் வந்த வீரா்கள், கயிற்றில் வலை கட்டி கிணற்றில் இறங்கி 3 மான்களையும் பாதுகாப்பாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, அந்த மான்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


